கபலோரக்கவிதை 6-10

கபலோரக்கவிதை 6-10

அத்தியாயம்-6

நித்யா செல்வதையே பார்த்திருந்த தேவா,அவள் சென்றதும் மெல்ல வசந்திற்க்கு அழைத்து தனது வண்டியை எடுத்துக்கொண்டு கல்லூரியின் அருகில் வர சொன்னான்.

வசந்த் வந்ததும் வண்டியை வாங்கியவன் சென்று நின்றயிடம், ராபின் கும்பல் வழக்கமாக கூடும் இடமான கோவிலின் பின் பக்க சுவற்றை ஏறிகுதித்தவன் அவர்களை வைத்து வெளுத்து வாங்கிவிட்டான்.

ஏற்கனவே அவர்கள் போலீசுக்கு பயந்து தான் ஒளிந்து இருக்கின்றார்கள் அதனால் வெளியவும் ஓட முடியவில்லை.

கையில் கிடைத்த கம்பை வைத்து விளாசித் தள்ளிவிட்டான் அவர்களை,ராபின் கையில் கிடைத்ததும் தன் காப்பினை உள்ளங்கைக்கு இடமாற்றி அவனது முகத்தில் குத்தினான்,ராபினின் பல்லும் மூக்கும் உடைந்து ரத்தம் வந்தது, அவனது கூட்டாளிகளின் முகத்திலும் நல்ல அடையாளத்தை போட்டுவிட்டான்.

நானே எங்கப்பாவுக்காக சும்மா இருந்தா என்னைய வம்புல மாட்டிவிடப் பார்ப்பியேல,அதுவும் படிக்கிற இடத்துல அடிதடினு எல்லாரையும் காலையில ஓட வச்சிட்டீங்க,நீங்க என்ன பெரிய இவனுங்களா என்று சொல்லி சொல்லி அடித்தான்..ஒத்தைக்கு ஒத்தை நிக்கேம்ல வாங்கல இப்போ என்று நின்றான்.

இப்போது அவர்கள் வெளியே செல்லவும் முடியாது; சொல்லவும் முடியாது தனது வேலை முடிந்ததும் பத்திரமாக சுவர் ஏறி குதித்து அந்த பக்கம் வந்தவனைப் பார்த்த வசந்தோ... முகத்தில் நல்ல கீறல் போட்டு விட்டுட்டியா மாப்பிள்ளை.

பலமா போட்டு வந்திருக்கேன் மச்சான்... என்றவன் நேராக வீடு சென்று அமைதியாக படுத்துக் கொண்டான்.

மாலைப்பொழுதில் வீடு வந்த மரியதாஸும் அருளும் முன்னறையில் அமர்ந்துப் பேசிக்கொண்டிருக்க,தூக்கம் கலைந்து வெளியே எழும்பி வந்த தேவாவைப் பார்த்து " என்ன தேவா இந்த நேரத்துல இங்க இருக்க எப்பவும் கூட்டாளிங்க கூடதான இருப்ப "என்று அருள் யதார்த்தமாக கேட்டார்.

இல்ல சித்தப்பா தூங்கிட்டேன் இப்பதான் எழும்பினேன் என்று சொல்லிக்கொண்டே வந்து அமர்ந்தவனின் கையில் ரெஜினா டீயைக் கொடுக்கவும்,வாங்கிக் குடித்துக் கொண்டே டிவியைப் பார்த்துக் கொண்டிருந்த தேவாவவைத்தான் தாஸ் பார்த்துக்கொண்டிருந்தார்...

அதைக் கவனித்தும் கவனிக்காதது போல டிவி இருந்தான் தேவா...

"ரீனா குட்டி உங்க காலேஜ்ல இன்னைக்கு என்ன பிரச்சனை நடந்துச்சு" என தாஸ் கேட்கவும்.

"உங்களுக்கு தெரியாதா அண்ணே நம்ம புள்ள ஜெயிச்சுட்டு,எதோ தேர்தலாமே அதுல, அந்த சகாயம் தம்பி ராபின் ஏதோ சேட்டை பண்ணி இருப்பன் போல இருக்கு போலீஸ் எல்லாம் போட்டு இருந்தாங்களாம்.நம்ம பிள்ளைங்கதான் வீட்டுக்கு வந்துட்டாங்களே" என அருள் சொல்லவும்.

"உன்கிட்டயா கேட்டேன், நீயா ரீனா குட்டி? நீ எதுக்கு பதில் சொல்ற"என்று தாஸ் கேட்கவும்.

அருள் முழிக்க,தேவா தன் வாய்க்குள்ளவே சிரித்தான்,அப்பா மோப்பம் பிடிச்சிட்டாருடா தேவா, மெல்ல எஸ்ஸாகிடு என்று அமைதியாக நகரவும்.

"அருளு உன் மகனை நிக்க சொல்லு இன்னும் நான் பேசி முடிக்கலை"

ரீனா"ப்பா அண்ணே அப்பவே வந்துட்டான், ராபின்தான் பிரச்சனை செய்தான்,அண்ணே ஒன்னுமே செய்யலை,அவன்கிட்டயிருந்து எஸ்கேப் ஆகி வந்துட்டான்"

"ஓஓஓ....அப்படியா இப்போதான் சகாயம் நான் வரும்போது எனக்கு எதுத்தாப்புல ஹாஸ்பிடலுக்கு போயிட்டு இருக்கான். ஜாடை மாடையா சொல்லிட்டு போறான், அவன் தம்பிய யாரோ அடிச்சு போட்டுட்டாங்களாம் மூஞ்சி முகரையெல்லாம் பேத்துவிட்டிருக்காணுங்களாம்"என்றவர் தேவாவைப் பார்க்க, டீ குடிச்ச டம்பளரை மேசையில வைத்துவிட்டு மெதுவாக நகர்ந்தவனைப் பார்த்த அருளு ஒருவேளை நம்ம பையன் செஞ்சிருப்பானோ என்று யோசிக்க.

தாஸ் அருளிடம் "ரொம்ப யோசிக்காத எல்லாம் உன் மகனோட திருவிளையாடல்தான், செய்வதையும் செய்து விட்டு ஒன்றும் தெரியாத பிள்ளை மாதிரி உள்ள போறான் பாரு,இவனை திருத்தலாம்னு பார்த்த நம்மளுக்கே டிமிக்கி கொடுக்குறான்,படிப்பு முடியட்டும் முதல்ல"என்று உறுமினார்

ரீனா மெல்ல தன் அண்ணனுடைய அறைக்குள் சென்றவள்"அண்ணே"என்றழைக்க.

திரும்பி பார்த்தவன் என்னடா குட்டி அப்பா விசாரனை முடிஞ்சு, அடுத்தது தங்கச்சி விசாரணையா..என்ன சொல்லு என்று சிரித்துக்கொண்டே அவளைப் பார்க்க.

அதெல்லாம் விசாரிக்க வரலை காப்பு பார்த்ததிலே கண்டுபிடிச்சிட்டேன் அது வளைஞ்சிருக்கு பாரு...அப்பாக்குத் தெரியாம சரிபண்ணிடு.

"ம்ம்ம்"

ஆமா உனக்கும் நித்யாவுக்கும் என்ன?"என் புருவம் உயர்த்தி கேட்டாள்.

அவள் இதை நேரடியாக கேட்டபாளென்று தேவா எதிர்பார்க்கவில்லை இந்த கேள்வி கேட்டதும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறியவன்" அது...அது ஒன்னுமில்லையே என்றவன்...நீ கீழ போ" என்று விரட்டவும்.

இல்லண்ணே அது வந்து நித்யா ரொம்ப பாவம்னா,நித்யாவோட அப்பா,நம்ம அப்பா மாதிரி இல்லை...அவங்கெல்லாம் வேற மாதிரி பாவம்னா அவா.மனுஷியாக்கூட மதிக்கமாட்டாங்க,எதோ கிட்சனுக்குள்ள வாழ்ற ஜந்துமாதிரி நடத்துறவங்க என்று ரீனா கவலைப்படவும்.

"என்ன ரீனாக்குட்டி இது இப்படியுமா நடத்துவாங்க" 

"நீ வேற அண்ணனு பேருக்கு ஒருத்தன் இருக்கான், நேத்துலாம் அவங்க அத்தை வீட்டுக்கு சென்னைக்கு கொண்டுப்போக நிறைய ஸ்னாக்ஸ் செய்தாங்களாம்,கையெல்லாம் சிவந்து புன்னாகியிருந்துச்சு,நான்தான் நோட்ஸ் எழுதிக்கொடுத்தேன்,பாவம் அவா யாருகிட்டயும் அவ்வளவு ஒட்டமாட்டா"அவகிட்ட சுவாரசியமாக நித்யாவின் வீட்டைபற்றி கேட்டுக்கொண்டிருந்தவனின் மனமெல்லாம் அவளின் வாசமே.காலையில் இருவரும் காதலை பரிமாறிக்கொண்ட தருனந்தான் நியாபகம் வந்தது.

அண்ணே நான் பேசறது கேட்கறீயா என்ன,பாவம் அவளை சைட்டடிக்குற நீ,அவளும் உன்னைப் பாக்குறா,டைம்பாஸ் பண்றீயா என்று கேட்கவும்...

சட்டென்று தங்கையை கோபத்தில் முறைக்கவும் ,ஓடி வந்து அவன் கையைப் பிடித்து: இல்லைண்ணே அவ பாவம்,நம்பிக்கை வச்சு அப்புறம் நடக்கலைனா கஷ்டம்தான,எங்கண்ணனுக்கும் கஸ்டம்தான என்று அவனது முகத்தை பார்த்து நிற்க்கவும்...

லேசாக சிரித்தவன் அவளது தலையைப் பிடித்து ஆட்டியவன் உனக்கு அந்த டென்சன் வேண்டாம் நான் பார்த்துக்குறேன்...அக்காங்ககிட்ட மட்டும் எதுவும் வாயவிட்றாத ரேடியோ இரண்டும் ஊரெல்லாம் பரப்பி வச்சிருவாங்க என சிரிக்க.

தலையாட்டியவள் இரண்டு ரேடியோவும் உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க எப்பவோ.

இது எப்போ? என அதிர்ந்துக் கேட்க.

அதுவா அப்பா உன்னை கப்பலுக்கு அனுப்ப முடிவு செய்தவுடனே உனக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் உன்னை அனுப்புனும்னு முடிவு பண்ணிட்டாங்க,

டொட்டடொய்ங் என்று தன் கையை விரித்து நின்றாள் ரீனா.

இதுவேறையா..க்கும்.

விடுண்ணே அது அவங்க ஆசை,என்னோட ஆசை வேறதான அதுதான் உனக்கு தெரியுமே என சிரிக்க அதற்குள் கீழயிருந்து சத்தம் கேட்கவும் ரீனா எட்டிப் பார்க்க...வசந்த் வந்துக்கொண்டிருந்தான் அதைப் பார்த்தவள்"ண்ணே உன் கைத்தடி வர்றான்"

ரீனாக்குட்டி வசந்த்தை மரியிதையில்லாம பேசாத,வயசுக்கு மூத்தவன்.

அதானா அவனை சொன்னா மட்டும் உனக்கு மூக்குக்குமேல கோபம் வந்துருமே... நான் கீழப்போறேன் என்று படிகளில் இறங்கவும் வசந்த் படியில் மேலேறிக் கொண்டிருந்தான்.

ஒரு இடத்தில் இருவரும் முட்டிக்கொள்ளவும் அவளது முடியை இழுத்து தன் கையில் வைத்துக்கொண்டு என்னடி சட்டம்பி.மச்சானை பார்த்தாமட்டும் ரொம்ப துள்ளுற.

சடையை விடு இல்லைனா அண்ணேங்கிட்ட சொல்லிடுவேன்.

"விடமுடியாது என்னடி பண்ணுவ,முத்தம் கொடு விடுறேன்"

முத்தமா?உனக்கா? பே என தலையசைத்து சொல்லவும்.

அவன் பே வா மரியாதையாவே பேசத்தெரியாதா உனக்கு.அன்னைக்கு மண்டையில கொட்டிட்டு ஓடுற...இப்போ வசமா மாட்டுனியா..மாட்டுனியா என அவள் தலையில் கொட்டவும்.

ஸ்ஸ்...ஆஆ...வலிக்குது மச்சான் என கண்கலங்கிய ரீனா தன் தலையை தடவிக்கொண்டே சொல்லவும்,சரி பொழைச்சுப்போ என் விட்டவனின் நெஞ்சில் கைவைத்து தள்ளியவள்,உன்னை கட்டிக்கமாட்டேன் பே என் கீழிறங்கவும்.

"தூக்கிட்டுப்போயிடுவேன்டி கட்டிக்கமாட்டேனு சொன்னா" என சொன்னவன் மேலவந்து"லே மாப்பிள்ளை என்னலே எதோ கசமுசானு" கேள்விப்பட்டேன்.

என்ன கசமுசா? என்ற தேவா கேட்டுக்கொண்டே ரெடியகவும்...இல்லை அந்த பிள்ளையை,நம்ம ரீனா க்ளாஸ்ல படிக்குதே பெயரென்ன நித்யா,அந்தப் பிள்ளைய ஒரு மாதிரியா பாக்குறியாம்,கேன்வாஸ் பண்ண போயிருந்தோம்ல அன்னைக்கு அந்த பிள்ளையும் உன்னைய ஒரு மாதிரியா பார்த்துச்சாம்"

இது என்னடா இதெல்லாம் யார் பார்த்தது சந்தடி சாக்குல நம்ம நூல் விட்டா; நம்மளுக்கே நூல் விட்டுருக்காங்க என நினைத்தவன்...அதெல்லாம் ஒன்னுமில்லை மச்சான் என அசடுவழிய சிரித்தான்.

உன் சிரிப்பே காட்டிக் கொடுத்துட்டு மாப்பிள்ளை,பார்த்துல தயிரும் மாவடும் சாப்பிடுவா அவ..நீயோ பழையதும் கருவாடும் சாப்பிடுவ...ஒத்துவருங்கிற மாப்பிள்ளை.

தன் பக்கத்தில் இருந்த தலையணை எடுத்து அவனை நாலு சாத்து சாத்தியவன். இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள தடையா பேசுற நல்லதா நாலு வார்த்தை சொல்லாம்லே" என்று அடிக்கவும்...

வசந்த் இப்போது சீரியஸ்ஸாக அவனிடம் கேட்டான்" உண்மையாவே அந்த பிள்ளைய உனக்கு பிடிச்சிருக்கா ?விரும்புறியா?".

சிறிது நேரம் மௌனமாக இருந்த தேவா"ஆமா ரொம்ப,இங்கயிருந்து என்று தன் நெஞ்சை சுட்டிக்காட்டினவன், அப்படியே தன் கண்ணை மூடி அவளது ஞாபகத்தில் நின்றிருந்தான்.

வசந்த் அவனைத் தட்டி அழைத்தவன் தேவாவின் கண்களைப் பார்த்து "நீ உண்மையா விரும்பற சரி,அந்தப் பிள்ளைக்கு உன்ன பிடிக்கனுமே ராசா"

"அதெல்லாம் பிடிச்சிருக்கு" என்றவன் கள்ளசிரிப்பு சிரிக்கவும்...

"ஏலே இது எப்ப நடந்துச்சு, உன் கூடவேதானல சுத்துறேன்,எனக்குத் தெரியாம எப்படி,எப்போ"

அதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம் மச்சான், உனக்கெல்லாம் அது தெரிய வேண்டாம் வா இன்னைக்கு என்னோட ட்ரீட் நம்ம பசங்க எல்லாம் கூட்டிட்டு வெளியே போவோம் என்று இருவரும் வெளியே கிளம்பினர்.

வெளியே கிளம்பும் போது அருள் வந்தவரு லே வசந்த்து இங்க வா சின்னபிள்ளைய எதுக்குல கொட்டிவச்சிருக்க,பிள்ளை அழுது கண்ணெல்லாம் சிவந்திருக்கு,பிள்ளை மேல எதுக்குல கையவச்ச என்று கேட்கவும்.

வசந்த் பத்தவச்சிட்டு சும்மா இருக்கத பாரு என்று ரீனவை முறைத்துப் பார்க்கவும்...அவளோ தன் நாக்கை துருத்தி காண்பித்து எப்படி என்று சிரித்தாள்.

சித்தப்பா விடுங்க அவங்க ரெண்டு பேரும் சண்டை போடுறது என்ன புது விஷயமா ?எப்பவும் தானே சண்டை போடுறாங்க என்றவன்..ரீனா குட்டி உனக்கு என்னடா வேணும் அண்ணே வெளியே போறேன்.

பரோட்டாவும் கோழி பொரிச்சதும் என்று அவள் சொல்லியதும் வண்டியைக் கிளப்பினான்.

ஏற்கனவே நல்ல தின்னு தின்னு கொழுப்பு கூடிப்போய்தான இருக்க...கஞ்சிய குடிச்சுட்டு படு மாமான் மொவளே என்று வசந்த் கத்தி பேசவும்... அவனை அடிக்க ஓடிவந்தாள் ரீனா,அதற்குள் வண்டி வாசலைக் கடந்து சென்றுவிட்டது.

அங்கு நித்யா வீட்டிலோ சாய்நாத் சென்னை செல்வதற்கு தயாராக ,அவனுடனே கூட சிவசுவும் கிளம்பினார்.சாய்நாத் கல்யாணம் எப்போது வைக்கலாம் என்று பேசுவதற்கும் நித்யாவின் கல்யாணம் வைக்கலாமா? வேண்டாமா? என தன் அக்காக்களுடன் கலந்து பேசவும்தான் போகிறார். 

மாலையில் நித்யாவும் தேவாவும் நடந்து வரும்போது இருவருக்கிடையே காணப்பட்ட நெருக்கமே பறைசாற்றியது: அவ்வளவு பாந்தமாக தன் கணவனோடு நடந்து வரும் மனைவிப் போல அழகாக அந்நியோந்நியமாக நடந்து வந்தனர்.அதைவிட சிவசுவைக் கண்டவுடனே நித்யாவின் முகம் கலவரமாகியதை கண்டுக்கொண்டார்.

வீடு வந்ததும் நித்யா உன் கூட ஒரு பையன் நடந்து வந்தானே அது யாரு? என்று கேட்டவரின் தோரணையே சொல்லியது நீ கட்டாயம் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று.

அது வந்துப்பா ரீனாவோட அண்ணன்,நான் அங்கயே மாட்டிக்கிட்டேன் அவங்கதான் அழைச்சிட்டு வந்தாங்க.

ஓஓஓ...அவங்களுக்கு எப்படி நீ கிளாஸ் ரூம்ல மாட்டினது தெரியும் ஒரு சந்தேகம் அதான் கேட்டேன்.

"அவங்களும் அங்கதான்பா படிக்கிறாங்க"

அப்படியா சரி நீ உள்ளப்போ என்றவர் தன் சிந்தனையில் மூழ்கிவிட்டார்.தேவாவை பார்த்தும் அவன் நடந்து வந்த அந்த தோரணை,பார்வை இதெல்லாமே அவருக்கு சொல்லியது, தனித்தவன் அதுவும் தனித்துவமானவன்,

யாருக்கும் அடங்கமாட்டான்,நம்ம பொண்ணு கிட்ட பிரச்சனை பண்ணினாலும் நம்ம இரண்டு தட்டு தட்டினால் அடங்கிப் போக மாட்டான் என்று சரியாக கணித்தவர்.

அவனுக்கு கடிவாளம் போட முடியாது ஆனால் நம்ம பொண்ணுக்கு போடலாமே என்று அவரது மனம் சிந்திக்கத் தொடங்கியிருந்தது.

சாய்நாத்தும் சிவசுவும் அன்றிரவே சென்னைக்கு கிளம்பி சென்றுவிட்டனர். கல்லூரி கலவரம் நடந்தது என்பதால் இரண்டு நாள் விடுமுறை விட்டிருந்தனர் இனி திங்களன்றுதான் கல்லூரிக்கு செல்ல வேண்டும்.

நித்யாவின் மனதும் தேவாவின் மனதும் அவரவர் சிந்தனையிலேயே மற்றவரின் நினைவுகளை அசை போட்டுக்கொண்டே எப்போது கல்லூரிக்கு செல்வோம் என்று ஏங்கிக்கொண்டிருந்தனர்.

அத்தியாயம்-7

திங்களன்று காலை கல்லூரிக்கு கிளம்பவும் மரியதாஸ் ரீனாவிடம் இந்த சனி ஞாயிறுலயிருந்து உங்கண்ணனுக்கு க்ளாஸ் இருக்கு மரைன் அக்கடாமியில அட்மிஷன் போட்டாச்சு சொல்லிடு என்றதும் அவளோ தன் அண்ணனைப் பார்க்கவும்,உதட்டை சுழித்து கேட்டுச்சு என்று தன் காதினை தொட்டுக் காண்பித்தான் கல்லூரிக்கு கிளம்பவும் தேவாவுக்கு நித்யாவை பார்க்கலாமேயென்ற சந்தோஷத்தில் வண்டியை ஓட்டினான்.

ரீனா சென்றுவிட எப்பவும்போல நண்பர்களுடன் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டே நித்யா வருகின்றாளா? இல்லையா என்று பார்த்துக் கொண்டேயிருக்க.

அவளோ வந்தபாடில்லை தனக்கும் வகுப்பிற்கு நேரமாகி விட்டது என்பதால் எழும்பி செல்ல எத்தனித்தவன் இப்போது பார்த்தது, அவசர அவசரமாக பஸ்சை விட்டு இறங்கி உள்ளே நுழைந்து கொண்டிருந்த நித்யாவை தான்.

அவளைக் கண்டதும் கண்கள் பிரகாசிக்க கூடயிருந்தவர்களிடம் "லே நீங்க கிளாசுக்கு போங்க நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுவேன்" என்றவன் அவர்களது பதிலுக்கு காத்திராமல் நித்யாவின் பின்னாக சென்றான்.

அதற்குள் அங்கு நித்யாவிற்காக காத்திருந்த ரீனாவும்"ஏம்பா இவ்வளவு லேட்டு என்று அவள் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல...நமக்கு வினைய கூடவே வச்சிருக்கோமே என்று நினைத்தவன்,என்ன செய்யலாமென்று சட்டென்று யோசித்து முடிவெடுத்து ஓடினான்.

ரீனா நித்யாவுடன் க்ளாஸ்க்கு நடக்க,சட்டென்று வளைவில் நித்யாவின் கரத்தை பிடித்திழுத்து தூணின் மறைவில் நிறுத்தியவன்,உன்னைப் பார்க்க மூணு நாள் கழிச்சு வந்தா... ரீனா கூட அது பாட்டுக்கு க்ளாஸ்க்கு போற என்று கேட்டு நின்றான்.

அதற்குள் நித்யா பதறி "ஐயோ என்ன பண்றீங்க ரீனா தேடப்போறா.யாராவது பார்த்துற போறாங்க" என கண்களை உருட்டிப் பேசவும்.

சுற்றிமுற்றி பார்த்தவன் அப்படியே யாரும் பார்த்திடாத வண்ணம் அவளை மறைத்து நின்றவன்"லட்டு என்னை தேடுனியா?என் நியாபகம் இருந்துச்சா?என்று அவளது பதிலை தெரிந்துக்கொண்டே கேட்டான்.

ஆமா...என்று குனிந்து கொண்டே தலையாட்டியவள் ,தன் முகத்தின் வெட்கம் மறைக்க வேறுபக்கம் திருப்பியவளின் கன்னம் வளவளவென்று மெழுகுப்போல இருக்கவும் சட்டென்று தன் உதட்டை அதில் ஒற்றினான்,அவ்வளவுதான் அதிர்ந்து திரும்பியவளின் பட்டர் இதழ்கள் தேவாவின் உதட்டோடு உதடு உரசி நின்றது.

இருவருமே அதை எதிர்பார்க்கவில்லை, இருவருமே அப்படியே உறைந்து நிற்க!கண்களிரண்டின் பார்வைக்குள் ஒருவருக்கொருவர் விழுந்து கொண்டிருந்தனர் சுற்றுப்புறம் எல்லாம் மறந்து.

அதற்குள்ளாக தனது கூட வந்த நித்யாவை காணவில்லை என்று ரீனா தேடி அலைந்து கொண்டிருக்க, அவளது எதிரே வந்த வசந்த் " ஓய் நெத்திலி என்ன அரக்கப்பரக்க பாத்துட்டு வர்ற, பெல் அடித்து எவ்வளவு நேரமாகிட்டு,

என்ன க்ளாஸ்க்கு போகாம வராண்டாவுலயே சுத்திட்டு அலையுற"

அதுவா கூடவந்த நித்யாவைக் காணலை. எங்கப்போனானே தெரியலை. அதான் பாவம் அவளுக்கு இங்க இன்னும் சரியா பழக்கமேயில்லை அதான் என்று அவனிடம் பதில் கொடுத்துக் கொண்டே நித்யாவை தேடிப் போக...

வசந்த் தன் மனதுக்குள் ஒருவேளை நம்ம மாப்பிளை எதுவும் லீலைப் பண்றானோ...தெரியலையே.முதல்ல இவளைப்பாரு என்று நினைத்து அவளது கையைப் பிடித்து நிறுத்தியவன் "அவ வந்துடுவா நீ க்ளாசுக்கு போ"

"உனக்கு எப்படி தெரியும் அவ வந்துருவானு"

நெத்திலி உடம்ப வளர்க்கிறத விட்டுட்டு முதல்ல கொஞ்சம் மூளையை வளரு...அவ யாருகிட்டயாவது பேசிட்டிருப்பா என சொல்லி முடிக்கவில்லை, அதற்குள்ளாக ரீனா"அவ நின்னு பேசுறளவுக்கு இங்க யாருமில்லையே என சொல்லிக்கொண்டே வந்தவளு இப்போது வார்த்தையை பாதியில் நிறுத்தி" ஐய் எங்கண்ணேகூட பேசிட்டிருக்காளா" என கேட்டவள்.

அப்போ சரி நான் கிளாசுக்கு போறேன் என்று தலையாட்டி போக போனவளின் கையின்னும் வசந்த்திடம் தான் இருந்தது.

ரீனாவோ திரும்பி என்ன என்று பார்க்க,ஒன்றுமில்லை என்று தலையாட்டியவன்"நெத்திலி நம்ம இரண்டுபேரும் தனியா இருந்து பேசுவோமா"

"என்ன"

"சும்மா உட்கார்ந்து பேசுவோம்"

"என்ன பேசுவ"என ரீனா முறைத்துக்கொண்டே கேட்கவும்.

"அதுவா பன்னுக்கு எப்படி மாவட்டுறதுனு, உன்கிட்ட வந்து உட்கார்ந்து பேசலாமானு கேட்டேன் பாரு என் புத்தியை" என்று தன் நெற்றியிலே அடித்துக்கொண்டு,போம்மா போ க்ளாஸுக்கு நேரமாகிட்டுப் பாரு...உங்கண்ணனுக்கு ஒரு கற்பூரம் கிடைச்சிருக்கு உடனே பத்திக்கிட்டு...எனக்கு வாழமட்டையா இருக்கியே.எப்போ பத்தி எப்போ காதலிச்சு...டேய் வசந்து உனக்கு ஸ்ட்ரெயிட்டா அறுவதாம் கல்யாணந்தாம்ல என்றவன்...செல்லும் ரீனாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அங்கு தூணின் மறைவிலிருந்து நித்யாவும் தேவாவும் மெல்ல விலகி நின்றனர்.தேவாவின் பார்வை அவ்வளவு இளகி நித்யாவையே பார்த்துக்கொண்டேயிருந்தது.

அவள்தான் மெல்ல அவனது கண்களை மூடினாள்.

அவளது கையை விலக்கி தன் கை விரல்களோடு பிடித்துக் கொடுத்து வைத்துக் கொண்டவன், இப்படியே உன்னை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டுமா லட்டு...

அவளோ சரியெனத் தலையாட்டினாள்...ஐயோ இப்படி கொல்ற, எங்காயாவது கண்காணாத இடத்திற்கு கடத்திட்டுப் போயிடணும்டி உன்னை என்று கண்கள் கிறங்க பேசியவனின் பாவனையை பார்த்துக்கொண்டிருந்தாள்.அதற்குள் மறுபடியும் பெல்லடிக்கும் சத்தம் கேட்டதும் நீ முதல்லப் போ நான் மெதுவா பேயிடுவேன் என்றான்.

அவளோ அவனை விட்டு சொல்லுகிறோமே என்று மெல்ல நடந்தவள் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள்.

அவளைப் பார்த்த சந்தோஷத்தில் முகத்தில் அப்படியொரு அழகானதொரு புன்னகையுடன் தனது வகுப்பிற்குள் நுழைந்தவனைப் பார்த்து எல்லோரும் திகைத்தனர்.பின்ன தானாக சிரித்துட்டு போன பைத்தியம் கோட்டிக்காரனு சொல்லமாட்டாங்க.

தேவா உடனான அந்த சந்திப்பு நித்யாவின் மனமெல்லாம் நிறைந்திருக்க அதே சந்தோசத்துடன் வகுப்பிற்குள் நடந்தவளை ரீனா பிடித்துக்கொண்டாள்.

எங்க போன? உன்னை நான் தேடியலைஞ்சேன்...

அது...அது..என் நித்யா பதில் சொல்லமுடியாது திணறவும் அதுக்குள்ள பாடம் தொடங்கவும் ரீனவின் கவனம் மாறிற்று...ஹப்பா தப்பிச்சேன் என்று நிம்மதி மூச்சைவிட்டவள் ரீனாவின் கையை இறுகப்பிடித்துக்கொண்டு பாடத்தை கவனிக்க ஆரம்பித்தாள்.

மாலை கல்லூரி முடிந்து ரீனா தேவா நித்யா மூவரும் மெதுவாக அப்படியே வெளியே நடந்து வரவும்,நித்யா தனது பேக்கில் இருந்து ஒரு பார்சலை எடுத்து ரீனாவிடம் கொடுக்கவும்ன அதை வாங்கியவள் என்னவென்று கேட்க தேவாவும் பார்த்தான்தான் ஆனால் கேட்கவில்லை..

ஸ்னாக்ஸ் வீட்ல அண்ணா ஊருக்குப் போறானு செய்தோம்தான அது.அப்பா இல்லையே அதான் அம்மாகிட்ட கேட்டு எடுத்துட்டு வந்தேன் உனக்...என்று சொல்லவந்தவள் லேசாக சரித்து ஓரக்கண்ணால் தேவாவைப் பார்த்து உங்களுக்காக எடுத்துட்டு வந்திருக்கேன் என்று சொல்லி கொடுத்தாள்.

தேவாவும் அவளது வார்த்தை விளையாட்டை கவனித்துக் கொண்டுதான் இருந்தான்...லேசாக அவனது உதட்டை விரித்தவனின் கண்களோ மத்தாப்புவாக மலர்ந்திருந்தது.

எங்களுக்குனா எங்க ஒட்டுமொத்த குடும்பத்துக்குமா நித்யா?

சரிதான் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் இந்தசின்ன லட்டும் மிக்சரும் கொடுத்து காரியத்தை சாதிக்க பார்க்கிற...நல்ல வருவடியம்மா என்று ரீனா அவளை பரிகாசம் செய்தாள்.

போடி என்று நித்யா சிறிது வெட்கத்தோடு சொல்ல,அவ்வளவு அழகானதொரு தருணத்தை ரசித்துக்கொண்டு வந்தவர்களின் முன்பாக வந்து நின்றது சிவசுவின் வண்டி...

அதைப் பார்த்ததும் மெல்ல பதறிப் போய் ஐயோ அப்பா வந்துட்டாங்க என்றவள் அவரது அருகில் விரைந்து செல்லவும் ரீனாவும் அவளுடனே சென்று சிவசுவிடம்" எப்படி அங்கிள் இருக்கீங்க,சென்னையிலிருந்து எப்போ வந்தீங்க" என்று கேட்டாள்.

"நல்லாயிருக்கேன்" என ஒரு தலையாட்டல் அவ்வளவே அதை கவனித்த தேவாவிற்கு கோபம் வந்தது…

அவனுக்குத்தான் மனிதர்களே எடைபோட தெரியுமே. ரீனாதான் அப்பாவியாக அவரது முன்பாக சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

வண்டியை ஸ்டார்ட் செய்தவர் நித்யா ஏறிட்டாளா என்றுகூட பார்க்காது போக எத்தனிக்க,அதற்குள் அவள் நிலைதடுமாற சட்டென்று தேவாதான் பிடித்துக்கொண்டான்.

திரும்பி சிவசுவை ஒரு பார்வைதான் பார்த்தான் சிங்கத்தின் சீற்றம் கண்களில் தெரியவும் வண்டியை நிறுத்திவிட்டார்.மெல்ல அவள் ஒழுங்காக இருக்கும்வரை நித்யாவின் கையைப் பிடித்திருக்க தகப்பனின் முகத்தினை பார்த்தே தேவாவின் கையை தன் கையில் இருந்து விலக்கிவிட்டாள்.

தேவாவுக்கும் அவளது செயல் புரிந்துதான் இருந்தது,இருந்தாலும் அவள் ஒழுங்காக வீடுப்போய் சேரணுமே என்ற தவிப்பு இருந்தது அவனது நெஞ்சிலும் உணர்விலும்..பின் அவர்கள் சென்றதும் தான் வாய்ல வந்த நல்ல நல்ல வார்த்தைகளால் சிவசுவை திட்டிக்கொண்டிருந்தான்.

உடனே போய் தனது வண்டியை பார்க்கிங்கிலிருந்து எடுத்துவந்தவன் சிவசுவின் வண்டி கண்ணில் தென்படுகிறதா என்று வண்டியை வேகமாக ஓட்டி வந்தான் அதற்குள் அவர்கள் வீடுபோய் சேர்ந்தேவிட்டனர்.

வீட்டிற்கு வந்த தேவாவிற்கு மனதே ஆறவில்லை என்ன மனுஷன் பின்னாடி பிள்ளைய இருக்கா? இல்லையானு? கூட தெரியாம வண்டி எடுக்கிறான் கேனப்பையன் கேனபையன் என்னும் சிவசுவைத் தான் திட்டிக் கொண்டிருந்தான்.

மாலை வேளையில் வீட்டில் எல்லோரும் அமர்ந்திருக்க ரீனா தனது பையில் வைத்திருந்த நித்யா கொடுத்த பார்சலை பிரித்து எடுத்து அவளது அண்ணனுக்கு மட்டும் தனியாக ஒரு பங்கை ஒதுக்கி வைத்தவள். மீதி எல்லாம் ஒரு தட்டில் பரப்பி கொண்டுவந்து முன்னறையில் உட்கார்ந்திருந்த எல்லோருக்கும் கொடுத்தாள்.

அவளது அக்காக்களும் இருந்தனர்,அருள் அவரது மனைவி மரியாதாஸ் என குடும்பமாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததால் எல்லோரும் அதை சாப்பிட்டு விட்டு, எங்க புள்ள வாங்குனா ரொம்ப நல்லா இருக்கு டேஸ்ட் என்று ஆளாளுக்கு கேட்கவும்... ரெஜினாவோ இவ எங்க வாங்கிட்டு வந்து இருப்பா? என் பிள்ளை தேவா வாங்கிட்டு வந்திருப்பான் அப்படித்தான என்று கேட்கவும்.

ரீனாவோ அதுவும் ஒருவகையில சரிதான் உங்க மகன் மூலமாக வந்ததுதான்... உன் மருமக கொடுத்துவிட்டாள் என்றதும்தான் எல்லாரும் ஒரு நிமிடம் அதிர்ந்து ரீனாவை பார்க்க... மரியதாஸும் அருளும் என்னடா இது புது கதை என்று சந்தேகமாக பார்த்தனர்.

அதற்குள் ரீனா "யம்மா நித்யாதான் அத்தைக்குகொண்டு குடுன்னு தந்தாள்" என்று சமாளித்தாள்.

ஆனால் மாரியதாஸ் அந்த வார்த்தையை மனதில் பதியவைத்துக்கொண்டார்...சும்மா ரீனாகுட்டி என்னத்தையும் உளறக்கூடிய ஆளில்லையே,அவக்கூட படிக்கிற பிள்ளைனா அவ வயசுத்தான இருக்கும் என்று யோசித்தவர்.

நித்யா யாரு குட்டி என்று கேட்கவும்...அவளது மொத்த ஹிஸ்டரியையும் மொத்த குடும்பத்திற்கும் சொல்லிவிட்டாள்...தேவா நித்யா விஷயத்தை தவிர.

தேவாவை டீ குடிக்கவென்று ரெஜினா அழைக்கவும் கீழே வந்தவனின் கண்ணில் பட்டது மொத்த குடும்பமும் ஒன்றாக அமர்ந்திருப்பதைத்தான்...அவனுக்கு அது ரொம்ப பிடித்தமான நேரமும்கூட,அப்படியே வந்து தனது அம்மாவின் அருகிலயே கீழயே அமர்ந்தவனுக்கு டீயும், அவனுக்கு என்று எடுத்து வைத்திருந்த ஸ்னாக்ஸை கொடுக்கவும்...அண்ணனும் தங்கையும் பார்வையாலே எதோ பேசிக்கொள்ள தாஸிற்கு புரிந்தது.மகன் அந்தப் பெண்ணிடம் சருக்குகிறானென்று இது சரிவாராதே.வாழ்க்கையில் மகன் தோற்றுவிடக்கூடாதே என்றதொரு பதைபதைப்பு இருந்தது.

அவரது கண்கள் தன் மகனையே வாஞ்சையோடு பார்த்துக்கொண்டிருந்தது.

அங்கு நித்யாவோடு வீட்டிற்குள் வந்தவர் அவளை பளாரென்று அறைந்துவிட்டார்.பெண்பிள்ளைக்கு அதென்ன நிதானமில்லை.நான் வண்டியை எடுக்கறதுக்குள்ள ஏறி உட்கார்ந்தா வழுக்கித்தான் விடும்...என்று சத்தமிட்டவர் மனைவியையும் சாடினார் பெண்பிள்ளையை சரியா வளர்க்கத் தெரியலைனு.

அதொன்றுமில்லை தேவாவிடம் காட்டமுடியாத ஆதங்கத்தை இங்கு பெண்களிடம் காட்டினார் அவ்வளவே.

சிவசு அமைதியாக சிலபல காரியங்களை கமுக்கமாக செய்துக்கொண்டிருந்தார்.மகளின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டுப் போய் பார்த்துவிட்டு வந்தார்.அவளுக்கு பதிணெட்டு வயது முடிய இரு மாதங்களே இருந்தது...

இப்படியாக நாட்கள் இறகுபோல பறந்து செல்ல அவர்களது முதல் செமஸ்டர் தேர்வு முடிந்து விடுமுறையில் கும்பகோணத்திற்கு செல்ல தயிராகிருந்தனர் சிவசுவின் குடும்பம்.விடுமுறையை சந்தோஷமாக கழித்துவிட்டு வரலாம் என்று சென்றுவந்த நித்யா தேவாவிற்கு அதிர்ச்சியானதொரு தகவலைத்தான் கொண்டு வந்தாள்.

அத்தியாயம்-8

செமஸ்டர் லீவு முடிந்து கல்லூரி திறக்கவும் திரும்பும் மாணவர்கள் மனதில் உற்சாகதத்துடன் வகுப்பிற்குள் நுழைந்தனர்.

ரீனாவும் தேவாவும் தனித்தனியாக நித்யாவிற்காக காத்திருந்தனர், கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த நித்யாவை கண்டதும் தேவாவிற்கோ ஏதோ வித்தியாசம் தோன்றியது.குனிந்த தலை நிமிராமல் அப்படியே ரீனாவிடம் கூட பேசாமல் தனது வகுப்பிற்குள் நுழைந்து கொண்டாள்...

தேவாவிற்கோ என்ன சொல்வதென்று தெரியாமல் அப்படியே முழித்துக் கொண்டு நின்றிருந்தான். குறைந்தது ஒரு பார்வையாவது பார்ப்பாள் என்று நினைத்து இருந்தவனுக்கு, அவள் பார்க்காமலே சென்றதும் அல்லாமல் ரீனாவையும் கண்டுக்காமல் சென்றது ரொம்பவும் வருத்தமாக இருந்தது.

தனது வகுப்பிற்குள் சென்றதற்கு பின்னும் மனம் முழுவதும் நித்யாவின் நினைவுகளாக இருந்தது ஏதோ ஒன்னு தப்பா தெரியுதே என்று மனதை போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தான்.

அங்கு நித்யாவோ ரீனாவின் அருகில் இருந்தாலும் அவளிடம் பேச கூடவில்லை.ரீனா பேச முயன்றாலும் ஒதுங்கி சென்றாள்.

பொறுமையாக இருந்த ரீனா..மதியம் சாப்பாட்டு வேளையிலும் தனியாக போய் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த, நித்யாவின் சாப்பாட்டை பிடுங்கி வைத்துக் கொண்டு...நீ பெரிய இவளாயிருந்தா முதல்லயே எங்க கூட ஒட்டாமல் இருந்திருக்கணும். இப்ப என்னடி பழகிட்டு ஒதுங்கி போற எங்கள பாத்தா உனக்கு அவ்வளவு கேனையா இருக்கா என்று கேட்டதும் தலையை குனிந்துக்கொண்டாள் நித்யா.

அப்போதுதான் குனிந்திருந்த நித்யாவின் கண்ணீர் அப்படியே சொட்டு சொட்டாக ரீனாவின் கைகளில் ... இப்பொழுதுதான் ரீனா கவனித்தாள் நித்யா அழுது கொண்டிருக்கின்றாள் என்று...ஹேய் நான் சும்மா தான் உன்னை யேசினேன் இதுக்காக ஏன் இப்படி அழுத.. ஐயையோ என்று பதறி அவள் கண்ணீரை துடைக்கவும்.

நித்யா நீ திட்டினதுக்காக அழலை என்று அவள் சொன்ன செய்தியைக் கேட்ட ரீனா கண்களை உருட்டி என்ன உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் என்று தெரியாமலேயே அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

உடனே தன் அண்ணனுக்கு அழைத்தவள் "அண்ணே நித்யா ரொம்ப அழுதாண்ணே நீ கொஞ்சம் இங்க வாயேன்"என்று அழைக்கவும்..

தேவாவும் பதறி அவசரமாக வந்தவனது மனதில் காலையில் அவள் வரும்போதே கவனிக்கதானே செய்தான் அவளது முகமும் சரியில்லை, ஆளும் சரியில்லையென்று அதை எண்ணிக்கொண்டே அங்கு வரவும்...அவனைக் கண்டதும் நித்யா தலையை குனிந்துக்கொண்டாள்,

தேவாவின் முகத்தைப் பார்க்கவேயில்லை.

என்ன ரீனாகுட்டி அம்மையார் எதுக்கு அழறாங்களாம் அவங்கப்பா மாப்பிள்ளை எதுவும் முடிவு செய்துட்டாரா? என்ன வேண்டாம்னு சொல்றாளா?

சட்டென்று நித்யா அவனை நிமிர்ந்துப் பார்க்கவும் தேவாவும் அவளைத்தான் பார்த்திருந்தான்...இருவரது கண்களும் மௌனபாடம் படிக்க.

ரீனாவோ நான் இங்கதான் இருக்கேன்...வேணும்னா போயிடவா? என்று கேட்கவும்.நித்யா அவளது கையைப் பிடித்து நிறுத்திருந்தாள்.

தேவா இப்போது நேரடியாகவே நித்யாவிடம்" எதுக்கு அழுதுட்டு இருக்க? என்ன விஷயம் எங்கிட்ட சொல்லவைண்டியதுதான. எதுக்கு அழுத? என்று கொஞ்சம் காட்டமாகவே கேட்டான்.

ரீனாதான் " அவளுக்கு அவங்க அத்தைப் பையனோட நிச்சயதார்த்தம் முடிஞ்சுட்டுதாம் அவங்கப்பா அவளுக்கே தெரியாம ஏற்பாடு பண்ணிட்டாங்களாம்,இனி நம்மகூடலாம் பேசமாட்டாளாம்" என்று ரீனா

சொல்லவும் நித்யா இப்போது ஏங்கி ஏங்கி அழுதாள்.

அதைக் கண்டவன் ஓஓஓ...அப்படியா வாழ்த்துக்கள் மாமி...உங்கப்பா உனக்கேத்த மாதிரி நல்ல பையனா பார்த்திருப்பார்.எதாவது நல்ல வொயிட் காலர் வேலையில் இருப்பான். அழகா வேற இருந்திருப்பான், கட்டிக்கிட்டு சந்தோஷமாக வாழுங்கள். அதுக்கு எதுக்கு இந்த அழுகை,சந்தோஷமா சிரிக்கத்தான் செய்யணும். இதுக்குதான் என்னை இங்க கூப்பிட்டியா ரீனாகுட்டி...

கல்யாணத்துக்கு கார்டு தருவாங்க நம்ம குடும்பமா போயிட்டு வந்துடலாம் சரியா, என சொல்லவும் நித்யாவின் அழுகை கூடியது.

ரீனா "என்னண்ணே நீ இப்படி பேசுற, அவளே நொந்து போய் வந்திருக்கா,நீ வேற காயப்படுத்தாத" என்று அவளும் அழுதாள்.

சிறிது தணிந்தவன் நித்யாவை பார்த்து பேக்கெல்லாம் ரீனாகிட்ட கொடுத்திட்டு வா, கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடலாம் என்றதும்...வெளியவா? அப்பாவுக்கு தெரிஞ்சா பிரச்சனையாகிடும்,நான் வரலை எனத் தலையாட்டிவளை கோபமாகப் பார்த்தவன்.

சரி அப்போ என்னையவிட்ரு என்று கோபமாக முறுக்கிக்கொள்ள" சரி வர்றேன்" என்று மெல்ல குனிந்துக்கொண்டே சொன்னவளை பார்த்து...நான் வண்டிய வெளியே எடுத்துட்டு வர்றேன் அந்த பஸ்ஸ்டாப்புகிட்ட போய் நில்லு என்றதும்...

ரீனா "பார்த்து ண்ணே அவளை எதுவும் பேசாத ண்ணே பாவம்"அவளையும் முறைத்துப்பார்த்தவன் வெளியே சென்று விட்டான்.

தனது வண்டியை எடுத்துக்கொண்டு வந்தவன்,பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த நித்யாவின் அருகில் செல்லவும்: அவள் பயந்து பயந்து வண்டியில் ஏறினாள்,தாவணியால் முக்காடிட்டுக்கொண்டு,அவளிடம் ஏறிட்டியா ஒழுங்கா பிடிச்சுக்கோவென்று நூறு முறை சொல்லிருப்பான்.

இப்போது அவனது வண்டி சென்று நின்றயிடம் மீன்பிடி துறைமுகம், அங்கு நின்றிருந்த அவர்களது பெரிய போட்டிற்குள் அழைத்து சென்றான். அந்த சூழல் அவளுக்கு புதியது,பயந்து பயந்து அவனையொட்டியே நடந்தவளது மேனியின் தீண்டல் தேவாவை என்னவோ செய்தது,

ஆனாலும் சூழ்நிலை கருதி அமைதியாக இருந்தான்.

ஆனால் அவனது மனது கனன்று கொண்டிருந்தது... எப்படி நிச்சயதார்த்தம் எல்லாம் முடிஞ்சு இங்க வந்து அமைதியா நிக்கறதைப் பாரேன்... அது வேற காலையில பேசாம அவாய்ட் பண்ணிட்டு போனாளே என எல்லாம் நினைத்து அவனது மனதில் சாத்தான் வந்து கூடி இருந்தது.

அவனோ அங்கேயிருந்த கைப்பிடி சுவற்றில் சாய்ந்து நின்றவன், தனது கைகளை கட்டிக் கொண்டு அவளையே பார்த்து இருந்தான்.

நித்யாவோ அவனை நிமிர்ந்து பார்ப்பதும் பின் குனிந்து கொள்வதுமாக இருக்க...

அப்புறம் சொல்லுங்க மேடம்,அத்தை பையனோட கல்யாணம் எப்போ? ஹனிமூன் எங்க போறீங்க? எல்லாம் பிளான் பண்ணி இருப்பீங்கதான உங்க பியான்சி கூட.அப்போ உங்க மூத்த பிள்ளைக்கு என்னோட பெயரை வச்சிருவீங்க தேவானு அப்படித்தான என்று கேட்டதும்.

நிமிர்ந்து கண்ணீர் கண்களோடு அவனை முறைத்துப் பார்க்க...அடிங்க ஊமைக்கோட்டான் மாதிரி இருந்த, செய்றதெல்லாம் செய்துட்டு இங்கு வந்து என்னை முறைச்சு பார்க்கிறாயா? என்று கையை ஓங்கியதும்:அரண்டு அப்படியே தரையில் குனிந்து தன் கரம் கொண்டு முகத்தை மூடி இன்னும் சத்தமாக அழ ஆரம்பித்தாள்.

அவனுக்கே அதைப்பார்த்து மனமிளகியது, மெல்ல குனிந்து அவளைத் தூக்கினான்.அப்படியே அவனது நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு தேம்பி தேம்பி அழுதாள் எவ்வளவு விலகிப்போகணும் என்று நினைத்தாளும் தனது அன்பானவர்களும் மனதிற்குப் பிடித்தவர்களும் அருகிலிருந்தால் மனம் பூனைக்குட்டியாக அவர்களிடம்தான் சாடும்.

நித்யாவின் மனதும் அப்படித்தான் இன்னொருத்தனோடு நிச்சயம் முடிந்ததும்,தேவாதான் வேண்டும் என்று மனம் முரண்டு பிடிக்க என்ன செய்வதென்று தெரியாது குழம்பி இருந்தவளுக்கு இப்பொழுது தெள்ளத் தெளிவாக தெரிந்தது தேவாவை விட்டு அணுளவும் பிரிய முடியாது என்று.

மெல்ல அவளது முதுகை வருடிக் கொடுக்கவும், அழுகை மெல்ல விசும்பளாக மாறியதும் அவளை தன்னைவிட்டுப் பிரிக்க,அவளோ இன்னும் அட்டைப்போல அவனுடன் ஒட்டிக்கொண்டாள்.

தேவாவிற்கோ சோதனையாக அமையவும் என்ன நடந்ததுனு சொல்லு லட்டுகுட்டி,இப்படியே அழுதிட்டிருந்தா அடுத்து என்ன செய்யணும்னு யோசிக்க முடியாது என்றதும்...மெதுவாக அவனை ஏறிட்டுப் பார்த்தவளின் முகம் அழுது அழுது வீங்கியிருக்கவும் அங்கிருந்து தண்ணி எடுத்து முகங்கழுவி வரச்சொன்னவன்,வந்ததும் அவளின் முன்பாக ஒரு கப் பால் இருக்கவும், அவனைப் பார்க்க நான்தான் வாங்கிட்டு வரச்சொன்னேன் பையனுங்ககிட்டசொல்லி குடி என்றான்.

அவளோ குடிக்காமல் இருக்க, ஆமா இதை குடிக்கவே இவ்வளவு யோசிக்குற அப்புறம் எப்படி என்னை கல்யாணம் செய்து குடும்பம் நடத்துவ?

இதைக்கேட்டதும் அவ்வளவுதான், அதை எடுத்து படபடவென குடித்து முடித்து க்ளாஸ்ஸை வைக்கவும் மெதுவாக சிரித்து...விஷயத்தை சொல்லு உங்கப்பன் அதான் என் மாமனார் சொட்டை மண்டை என்ன செய்து வச்சுருக்காருனு பார்ப்போம்.

எக்கப்பா உங்களுக்கு சொட்டை மண்டையா...என அவள் கேட்கவும்..

இப்போ பிரச்சனை அது இல்ல, உன் நிச்சயதார்த்த கதையை சொல்லு, பார்த்தியா எனக்கு என்ன ஒரு பாக்கியம் காதலியோட நிச்சயதார்த்த கதையை கேட்க வேண்டிய நிலை,நீ சொல்லு என அலுத்துக்கொண்டான்,

அதாவது செமஸ்டர் லீவுக்கு கும்பகோணம் சென்று ஒரு வாரத்தில் சிவசுவின் ஆறு அக்காவின் குடும்பமும் மொத்தமாக கும்பகோணம் வந்து இறங்கியது... நித்யா நேரடியாக தன் அம்மாவிடம் சென்று கேட்டாள்,என்னம்மா இங்க ஏதாவது விசேஷமா மொத்த குடும்பமும் வந்திருக்கு என்று கேட்டவளுக்கு ஜானகியிடம் இருந்து வந்த பதில் "தெரியாது" என்றுதான்.

அடுத்த நாள்தான் தெரிய வந்தது...சாய்நாத்திற்கும் அவளது சென்னையில் இருக்கும் அத்தை பொண்ணு வர்ஷினிக்கும் நிச்சயதார்த்தம்,குடும்பம் எல்லோருக்கும் தெரிந்திருக்க, வீட்லயிருக்கும் மூணு ஜீவனுக்குத் தெரியாது ஜானகிதான் அலுத்துக் கொண்டார் .என்னைக்கு நம்மகிட்ட அந்த மனுஷன் சொல்லிட்டு செய்திருக்கிறார் இன்னைக்கு செய்றதுக்கு...

அது கூட எனக்கு பிரச்சனையா தெரியல நான் பெத்ததாவது ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருக்கலாமே என்று வருத்தப்பட்டவருக்கு கண்ணீர் தானாக வந்தது... திவ்யாவும் நித்யாவும்தான் அவரைத் தேற்றினர்.

கல்யாணம் முடிஞ்சு வந்தநாள்லயிருந்து இதேநிலமைதான் எப்போதான் மாறப்போகுதோ என்ற தன் முகத்தை துடைத்தவர் அப்படியே வேலையில் மூழ்கிவிட்டார்.

மாலை வேளையில் தனது அண்ணனுக்கு நிச்சயதார்த்தம் என்றவுடன் நன்றாக அலங்கரித்து இருவரும் தயாராகவும், சில நகைகளை ஜானகி அதிகமாக நித்யாவிற்கு போட்டுவிடவும் எதுக்குமா இவ்வளவு நகை.எதோ எனக்கு பேசிமுடிக்கிற மாதிரி கொண்டு தர்றீங்க என்று சிரித்துக்கொண்டே வாங்கிப் போடவும், என்னனு தெரியலை உங்க அப்பா தான் உனக்கு கொடுக்க சொன்னாரு என்று ஜானகி சொல்ல, இது என்ன புதுசா இருக்குனு யோசித்தாள்.

எல்லா குடும்பத்து பெரியவர்களும் அங்கிருக்க, சொந்தங்களும் கூடியிருக்கும் பொழுதுதான் சாய்நாத்தையும் வர்ஷினியையும் முன்னே அழைத்து அமரவைத்துவிட்டு,அப்படியே சிவசுவின் கடைக்குட்டி அக்காவின் மகனான விசாகனையும் நித்யாவையும் அழைத்து அமரவைத்து நிச்சயதார்த்த பத்திரிகை வாசித்தனர்.

அப்போதுதான் நித்யாவிற்குமே தெரியும், இரு நிச்சயதார்த்தத்தையும் ஒன்றாக முடித்துவிட்டார் சிவசு. சாய்நாத் வர்ஷினி திருமணம் ஒரு மாதத்தில் நடத்தவும், நித்யாவின் திருமனம் விடுமுறையில் நடத்தவும் பேசி முடித்து தீர்மானித்து விட்டனர்.

இரவு ஜானகியின் மடியில் படுத்து நித்யா அழுது கொண்டிருந்தாள், ஜானகிதான் உங்க அப்பா எடுத்த முடிவு அது நம்ம எப்படி மாத்தமுடியும்... என்னைக்கு நம்ம ஆசை, விருப்பம் எல்லாம் இந்த வீட்ல நிறைவேறி இருக்கு சொல்லு, விசாகன் நல்ல பையன்தான்.ஆனா நான் மாட்டிகிட்டு முழிச்ச, அதே குடும்பத்துக்குத்தான் நீ வாழப்போறனு நினைச்சதான் வருத்தமாயிருக்கு,

விசாகனை உன் கைக்குள்ள கொண்டு வந்தால்தான் உண்டு என பெருமூச்சு விட்டார்.

அவளுக்கு தேவாவிடம் இதை எப்படி சொல்ல இந்தக் கல்யாணத்துல இருந்து எப்படித் தப்பிக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன்.

விசேஷம் முடிந்து எல்லா சொந்தங்களும் அடுத்த நாள் கிளம்பி சென்றதும்தான் சிவசு மனைவி மகள்களை அழைத்தார்: உனக்கு நிச்சயம் முடிஞ்சு ஒரு குடும்பத்துல வாழ போற, நம்ம வீட்டு மானம் மரியாதை எல்லாம் உன் கைலதான் இருக்கு அதுக்குதக்க நடந்துப்பனு நினைக்கிறேன் என்று குதர்க்கமாக சொன்னவர் நித்யாவைப் பார்க்க...அவளோ சரிப்பா என்று தலையை அசைத்தாள்.

விடுமுறை முடிந்து தூத்துக்குடி வந்து சேர்ந்தவர் இன்று காலை கல்லூரியில் இறக்கி விடும் பொழுது "இங்க காலேஜுக்கு படிக்க மட்டும் தான் வந்து இருக்க, உனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துட்டு அதை மனசுல நல்ல பதிய வச்சுக்கோ" என்றுதான் எச்சரிக்கை செய்தார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவாவிற்கு சிவசு பற்றி நல்ல அபிப்பிராயம் வரவில்லை;எப்படி பட்ட மனுஷன் இவர்,ச்ச கட்டுன பொண்டாட்டிக்கு தெரியாமலேயே இரண்டு பிள்ளைகளுக்கும் நிச்சயதார்த்த ஏற்பாடு பண்ணி இருக்கிறார் என்று யோசித்தவன்,பார்த்தது அவனது முகத்தையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்த நித்யாவை தான்.

"இதுக்கா லட்டு இவ்வளவு அழுகை அழுது என்னையும் பயமுறுத்தின,மச்சாங்கிட்ட சொல்லிட்டல விடு நான் பார்த்துக்குறேன் என்றவன் இங்கவா என்று அவளது கையைப் பிடித்து இழுத்தவன்,உனக்கு பதிணெட்டு வயசு எப்போ முடியுது என்று கேட்கவும்.

நித்யா "அது முடிஞ்சு பத்தொண்பது வயசு தொடங்கிட்டு,அன்னைக்குத்தான் நிச்சயதார்த்தம் வச்சுட்டாங்க"

ஓஓஓ...உங்கய்யாஆஆஆ ரொம்ப விவரமான ஆளாயிருக்காரே. அவர வேறுவிதமாகத்தான் சமாளிக்கணும்,எப்படினு யோசிக்குறேன் சரியா.

எதுவும் பிரச்சனையாகிட்டுனா என்ன பண்றது என்று குழந்தையாக அவள் பயந்து கேட்கவும்.

மெல்ல அவளது கன்னங்களை தனது இருகரத்தாலும் தாங்கியவன் லட்டு அதையெல்லாம் உன் தலைக்குள்ள ஏத்திக்காத சரியா நீ அமைதியா இரு,இன்னும் ஒரு ஆறு மாசம் இருக்குதான, அத அப்போ பாத்துக்கலாம். இப்போ உன் பக்கத்துல இருக்க என்ன கவனி சரியா?

ம்ம்ம் என்று தலையாட்டியவளின், கடற்காற்றின் ஈரத்தில் உலர்ந்துப்போயிருந்த அவளது உதட்டிற்கு ஈரப்பதம் கொடுப்பதற்கு தன் நாவினால் தொட்டு மீட்டினான்.

அவ்வளவுதான் நித்யாவின் கண்கள் விரிந்து ஆழ்கடலாக தேவாவினை தன்னுள் இழுத்துக்கொள்ள,மெல்ல இமைகளை தாழ்த்தி,அப்படியே மூடியவள்,இளமையெனும் பருவ வாசலில் நிற்கும் அவளது உணர்வுகள் அவனது அந்த தொடுகையில் பிரவிகமாக கடற்கரையின் நுரைப்போல பொங்கியது.

அவனது சட்டை காலரை தன் கரங்கொண்டு அழுத்திப் பிடித்து தன்னை நிறுத்திக்கொண்டாள்.

அவனோ உதடுதாண்டியும் உள் நுழைந்து தனது இளமை பசிக்கு என்ன கிடைக்கும் என்று தேடினவன், அவளது இடுப்போடு தன் கரங்களை அணைவாகப்போட்டு தன்னோடு இறுக்கிப்பிணைத்துக் கொண்டான்.

இன்னும் வேண்டும் வேண்டும் என்றதொரு தீண்டலில் இருவரும் திளைத்து மூழ்கி முத்தெடுக்க முயற்சித்துக்கொண்டிருந்தனர்.

அதற்குள் மரியதாஸிற்கு போனின் மூலம் தகவல் சென்று சேர்ந்தது" ஐயா நம்ம தம்பி ஒரு பெண்ணை நம்ம வீஞ்சு நிப்பாட்டிருக்கல அங்க கூட்டிட்டு வந்திருக்காவ" என்றான் அவரின் விசுவாசி...

அத்தியாயம்-9

தேவாவோ நித்யாவை இறுக அணைத்து யாரிடமும் கொடுக்காமல் தனக்குள் பொத்தி வைத்துப் பாதுகாத்து வைக்கும் பொக்கிஷம் போல் கட்டிக்கொண்டிருந்தான்.

அவளும் அவனுடன் இழைந்து அவன் முதுகோடு தனது கைகளை நுழைத்து பின்னிக்கொண்டாள்.அவனது கைகள் செய்த மாயமோ! நித்யாவின் அங்கங்கெல்லாம் திண்டாடியது.

மாந்தளிர் மேனியை தனது முத்தத்தால் சிவக்க வைத்தான்,மீசையும் தாடியும் அவளுக்கு கிச்சு கிச்சு மூட்ட அவனது தலையை தனது கழுத்திலிருந்து அவனை முகத்தை தள்ளிவிட்டாள்.

மெதுவாக அவளை விடுவித்தவன் தனது மீசையை தனது பற்களால், சிறிது உதட்டை வளைத்துக் கடித்து இழுத்துக்கொண்டு அவளையே கண் இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளுக்கோ வெட்கம் பிடுங்கித்திண்க தன் தலையை திருப்பி கடலைப் பார்ப்பது போல போட்டிலிருந்தே பார்க்கவும்.அப்படியே அவளது பின்னாக சென்று கட்டி அணைத்து பின் கழுத்தில் அவளது நீண்ட ஜடையை ஒதுக்கி முத்தமிட, அவனது மீசையின் குறுகுறுப்பில் நெளிந்துக்கொடுத்தவளது வயிற்றினூடே தனது வலது கையை சட்டென்று கொடுத்து தாங்கி தன்னோடு இறுக்கியவனின் கையின் அழுத்தம் அவளது வயிற்றில் நன்கு பதிந்தது.

அதனால் தனது வயிற்றை எக்கி வாயினால் மூச்சினை வேகமாக இழுத்துவிடவும்,அதைப் புரிந்துக்கொண்டவன் மெல்ல அவளின் தலையில் இருந்த அந்த மல்லிகையின் வாசத்தை தனது நுரையீரலுக்குள் கடத்தினான்.

அவள்மேலிருந்த மொத்தக் காதலையும் கண்களில் தேக்கி அவளது முகத்தை திருப்பி அவளது இதழை தன் உதட்டின் ஆளுகைக்குள் கொண்டு வந்தவன் அவளதுஉயிர் மூச்சாக தான் கலந்து விட வேண்டும் என்று பிராயத்தனப்பட,அவளோ அது தாளாது அவனது தலையை பிடித்து தள்ள முயற்சிக்க தன் கண்கள் திறந்து பார்க்க,நித்யாவோ பயந்துப் பார்த்தாள்…

அதை உணர்ந்தவன் மெல்ல அவளது இதழை விடுவித்து விலகினவன்...சாரி என்று சொல்லிவிட்டு...வா போகலாம் என்று வெளியே சென்றவனின் கைகளைப் பிடித்திருந்தாள் நித்யா.

அது...அது சாரி... எதுக்கு சொன்னீங்க,எனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சு...கோபமா? வேணும்னா இன்னோரு டைம் கிஸ் பண்ணிக்கோங்க,எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை என்றவளைப் பார்த்தவனுக்கு சிறு கிள்ளையாகத் தெரியவும்…

ஆமா எனக்கு மட்டும் பழக்கமா என்ன என்று இழுத்து தன் நெஞ்சோடு இறுக்கி கன்னம் முகம் நெற்றி என்று முத்தம் வைத்தவன்" ஐ லவ் யூ டி லட்டுக்குட்டி" என்று ஆயிரம் முறை சொல்லியிருப்பான்.

அவன் தன் காதலை மயங்கி கிறங்கி வெளிப்படுத்தவும்,நித்யாவிற்குள் இருந்த மொத்த தடைகளும் கழன்று தெரித்துவிட்டது,அவனே அவளது எல்லாமாக மாறிப்போனான்,இனி என்ன நடந்தாலும் தேவா மட்டுமே வேண்டும் என்று மனதில் ஆழப் பதிந்துவிட்டான் தேவா.

நித்யாவும் அவனது சட்டை மறைக்காத அந்தநெஞ்சில் தனது ஈர இதழ்களைப் பதித்து அவனது நெஞ்சினை குளிர்வித்தாள்.

இருவரும் தங்களை மறந்து தங்களது காதலை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர்.

அதற்குள் மரியதாஸும் அருளும் அங்கு வந்துவிட்டனர், அவனை வெளியே நின்று ...தேவா என்றழைக்கவூம்

அதைக்கேட்டு இருவரும் பதறி விலகினர்,ஐயோ அப்பா என்ற தேவா அவளை விட்டுநகர்ந்தவன், நித்யாவை அங்கயே இருக்க சொல்லிவிட்டு வெளியே வந்தவனை கண்டதும் அறைந்துவிட்டார் தாஸ்...அறைவாங்கியவனோ அதிர்ச்சியில் அப்படியே தன் தகப்பனை பார்த்து நின்றான்.

அதற்குள் அருளோ தேவாவை பிடித்தவர்"என்ன ண்ணே நீ,பிள்ளைய இப்படி அடிச்சுட்டியே, நம்ம பிள்ளை தப்பா நடக்க கூடிய பிள்ளை இல்லையண்ணே என்றவர்...எய்யா தேவா என்று அவனதுக் கன்னத்தை தடவிவிட,அதற்குள் வெளியே வந்த நித்யாவோ தேவாவை அடித்ததைப் பார்த்து ஓடிவந்து அவனது ஒரு கையைப் பிடித்துக் கொண்டு கண்களில் கண்ணீரோடு அவனையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

மரியதாஸுமே இப்பொழுதுதான் யோசித்தார் பிள்ளையை அடித்து விட்டோமே என்று.

மெல்ல அவனருகில் வரவும் விலகி நின்று முகத்தை திருப்பிக்கொண்டான். இதுவரை வீட்டில் யாரும் அவனை அடித்ததே இல்லை,முதன் முறையாக மரியதாஸ்தான் கையை நீட்டி விட்டார்.

அருளு அந்த பிள்ளையகொண்டு அவனை விட்டுட்டு வரச் சொல்லு. நம்ம வீட்டிலே அவ வசில் ஒரு பிள்ள இருக்கத்தானே செய்து யோசிச்சு நடக்க வேண்டாமா…

என் பிள்ளை என்னை மாதிரியே அடிதடியில் இறங்குதானு சொல்லும்போது கூட,அவனது எதிர்காலத்தை நினைச்சுதான் கவலைப்பட்டனே தவிர வேற எதுக்குமில்லை...ஆனா இப்போ என் பையன் ஒரு பொண்ண கூட்டிட்டு சுத்திட்டு அலையுறான் சொல்லும்போது ஒரு பெண் பிள்ளையோட வாழ்க்கையையும் நினைத்து எனக்கு வேதனையாக இருக்கு.

அந்தப் பொண்ணதான் விரும்புகிறான், அந்த பொண்ணைதான் கல்யாணம் பண்ணிக்க போறான் அப்படின்னா. வீட்ல பெரியவங்க பேசி முடிச்சு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றோம்.அதுவும் இப்போ இல்லை அந்த பிள்ளைகள் படிப்பு முடிக்கட்டும், நம்ம பையனும் வேலைக்கெல்லாம் போகட்டும் அதுக்கு அப்புறமா தைரியமா பொண்ணு கேட்ட் நானே போறேன் என்றவர் நித்யாவைப் பார்க்க பருந்துக்கு பயந்து ஒதுங்கும் கோழி குஞ்சுப்போல அவரைப் பார்த்ததும் தேவாவின் பின் ஒளிந்தவளைப் பார்த்து…

நம்ம பைய குணத்துக்கும் இந்த புள்ள குணத்துக்கும் சுத்தமா ஒத்துப்போகாதுப் போல,அப்புறம் எப்படி இரண்டு பேரும் பழகிச்சுதுங்க என்று யோசனையோடவே கிளம்பி சென்ற்விட்டார்.

அருள்தான் மகனை சமாதானபடுத்தினார்,உனக்கு எதுனா என்கிட்ட சொல்லிருக்கலாம்தான,அந்த மிக்கேலு பைய அண்ணகிட்ட போட்டுக்கொடுத்திட்டான் என்றவர் நிச்யாவைப் பார்த்து…

அண்ணே அப்படித்தான் எப்பவும் இருப்பாவ,நீ பயப்படாத ரொம்ப பாசம் அதான்,என்ன நடந்தாலும் நீ தான் எங்கவீட்டு மருமக. நீ ஒன்னும் பயப்படாத என்று சொன்னவரை சந்தேகமாக பார்த்தாள் நித்யா.

என்ன அப்படிப் பாக்குற அண்ணே கோவத்துலதான் அப்படி பேசிட்டுப் போறாவ.ஆனா உள்ளுக்குள்ள ரொம்ப பாசம். கண்டிப்பாக தேவா விரும்புற உன்னைத் தவிர,வேற யாரையும் மருமகளா கொண்டு வர சம்மதிக்க மாட்டாங்க பாரேன்"

இதைக் கேட்டதும் நித்யா மெல்ல புன்னகைக்க தேவாவோ வேறு சிந்தனையிலிருந்தான்.

அருள் "அண்ணே மேல கோவமா இருக்கியா தம்பி?" என்று கேட்க…

அதில்லை ப்பா இவங்க வீட்ல இப்பவே பிரச்சனை அதப்பத்தி பேசத்தான் இங்க கூட்டிட்டு வந்தேன்..அதுக்குள்ள அப்பா எதேதோ சொல்லிட்டுப் போறாரு அதான் யோசனை.

அதைவிடு அண்ணனை நான் சமாளிக்கிறேன் முதல்ல மருமகள கொண்டுவிட்டுட்டு வா என்றார்.

தேவாவிற்கோ பலவித யோசனை மண்டையில் ஓடிக்கொண்டிருக்கவும் எதுவும் பேசாது வந்தவன் வண்டியில் ஏறவும்,யாரும் அருகிலில்லை எனப் பார்த்து நித்யா தேவாவின் கன்னத்தில் கைவைத்து ரொம்ப வலிக்குதா? என்று தாடியோடு சேர்த்து தடவி விடவும்,அப்படியே அவளது கையை தன் கன்னத்தோடு சேர்த்து பிடித்து வைத்துக்கொண்டு சிரித்தவன்.

 அப்பாதான கோபத்துல கையவீசிட்டாரு அவ்வளவுதான் வலிலாம் இல்லை,பொண்ணகூட்டிட்டு வந்திட்டேனு தகவல் போனதும் கோபம் வந்திட்டு அவ்வளவுதான்.இதுவரைக்கும் அப்பா என்ன அடிச்சதேயில்லை.என்னை இல்லை எங்கவீட்ல யாரையுமே.

 கோபம் வந்தால் குரல் உயரும் அவ்வளவுதான்,பின்ன அம்மா,ரீனாலாம் அப்பாகிட்ட அழுதே காரியத்தை சாதிச்சிடுவாங்க,வீட்டு பொம்பளைங்கள அழவைக்ககூடாதுனு சொல்லுவாங்க,நீ பயப்படாத நம்ம கல்யாணத்துக்கு உன் இரண்டு மாமனாரும் கியாரண்டி என்று சிரித்து தன் மீசையை முறுக்கவும்...அவளோ சுற்றும் முற்றும் பார்த்து பச்சக் என்று அவனது அந்தக் கன்னத்திலயே அவன் எதிர்பாராது முத்தம் வைக்கவும்…

ஹப்பா தேவா என்ற சிங்கம் ஒற்றை முத்தத்தில் அவளது இதழுக்கு சாசனமே எழுதி வைத்துவிட்டான்.

அதே கிறக்கத்தில் நித்யாவை கல்லூரியில் விட்டுவிட்டு ஒன்றும் தெரியாத பிள்ளைப் போல இருந்துக்கொண்டனர்.

கல்லூரிவிட்டு வெளியே வரும்போது மூவரும் வெளியே வரும்போது தேவா நித்யாவிடம் "இனி எங்ககூட பேசிக்குற மாதிரி உங்கப்பா வரும்போது காண்பிச்சுக்காத...அதுதான் நமக்கு சேஃப்.இல்லைனா உங்கண்ணன் கல்யாணத்தோடு உன் கல்யாணத்தையும் முடிச்சிடுவாரு.நான் படிப்பை முடிக்க வரைக்குமாவது எனக்கு டைம் வேணும் புரியுதா. என்னோட மரைன் படிப்பும் முடிஞ்சுடும் அப்போதான் உன்னை கல்யாணம் பண்ணினாலும் வச்சுகாப்பத்த முடியும்…

அப்பா வருமானத்தை நம்பி நான் இருக்கமுடியாதுதான...அதுதான் என்று சொல்லவும்.புரிந்தும் புரியாமலும் தலையாட்டி வைத்தாள்.

நித்யா சென்றதும்,தேவாவும் ரீனாவும் வீடு வந்துசேர அங்கு ஒரு பஞ்சாயத்துக்கு தயாராக இருந்தனர்.

தேவாவை விசாரிக்க தாஸ் அமர்ந்திருக்க,அங்க ரீனா வேற பஞ்சாயத்தை ஆரம்பித்தாள்" எதுக்குப்பா அண்ணனை அடிச்சீங்க,பாவம்ல அண்ணே 

"என்று தன் தந்தையிடம் எகிறி கேட்க…

" என்ன குட்டி அப்பாகிட்டயே கோபமா பேசுற" என்று ரீனாவை தேவா சத்தம்போட…

ரெஜினா வந்து ரீனாவை இழுத்து நிறுத்தி என்ன பிள்ளை பிரச்சனை.வந்தவுடனே இப்படி தரையில போட்ட மீனாட்டோம் துள்ளுற என்று கேட்கவும.ரீனா மொத்த விசயத்தையும் சொல்லிவிட்டாள்.

அவ்வளவுதான் என்னது பிள்ளை அடிச்சாங்களா என்று ரெஜினா ஒரு பக்கம் கேட்க,அகதா ஒரு பக்கம் கேட்க எல்லோரும் மரியதாஸை கோபத்தில் பார்க்க. இப்போ அவருதான் இதுயென்னடா நமக்கு வந்த சோதனை என்று விழித்துக்கொண்டிருந்தார்.

ரெஜினாவைப் பார்த்து "அறிவிருக்கா பிள்ளை உனக்கு,அந்த மிக்கேலு எனக்கு போன் பண்ணி உங்கப்பையன் ஒரு பொம்பளை பிள்ளைய கூட்டிட்டு வந்திருக்கானு சொன்னான். போய் பார்த்தா அந்த பிள்ளையோடு நீக்கான் அதைப் பார்த்தா கோபம் வருமா? வராதா?

நம்மபிள்ளை ஒரு பொம்பளைபிள்ளை வாழ்க்கையை கெடுத்ததுட்டானு என்னைக்கும் பெயர் வந்திடக்கூடாது.ஆயிரம் அடிதடி பண்ணினாலும் ஒரு பெண்ணோடக் கண்ணீர் குலநாசம் அதான் அடிச்சேன்.

எல்லோரும் இப்போது அமைதியாக இருக்கவும் தேவா"ம்மா நான் அந்த பிள்ளையதான் விரும்புதேன், அவளத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்ன நடந்தாலும் ,அதுக்கு எதாவது வழி பண்ண சொல்லுங்க"என்றவன் தன்னுடைய அறைக்குள் சென்றுவிட்டான்.

அகதா"ஏன் மச்சான் நம்ம பிள்ளை மட்டுமில்லை அந்த பிள்ளையுந்தான் விரும்புது,பாவம் அதுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் எதாவது செய்யுங்க மச்சான்,பிள்ளை முகமே சரியில்லை,நம்ம பிள்ளை என்னைக்கும் தப்பு செய்யாது பார்த்து செய்யுங்க"

ஆஹமொத்தம் மொத்தக்குடும்பமும் தேவாவின் காதலுக்கு ஆதரவு தரவும்...மரியதாஸ் யோசித்தார்.பொண்ணுக்கேட்டா கண்டிப்பா அந்தாளு தரமாட்டான் என உறுதியாகத் தெரியும்.

மதியமே எல்லாத் தகவலையும் சேகரித்துவிட்டார் நித்யாவின் மொத்த குடும்ப வரலாறும் இப்போது அவரது கையில்...பொண்ணு தங்கமானப் பொண்ணு அதுமட்டுந்தான் அவருக்கு நல்லதாக கிடைத்த தகவல்.

தேவா தனதறைக்குள் சென்றவன் ஒரு முக்கியமான முடிவெடுத்திருந்தான்...அடுத்தநாள் நித்யாவிடம் 

சிலபொருட்களை கேட்டு வாங்கிக்கொண்டான்.

நித்யாவின் அண்ணன் திருமணம் முடிந்ததும் நித்யா விசாகன் திருமணத்திற்கு எல்லாம் தயார் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

கிட்டதட்ட பைனல் எக்ஸாம் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன் நித்யாவும் தேவாவும் நின்றியிருந்தயிடம் தூத்துக்குடி ரிஜிஸ்டர் ஆபிஸ்ல.

கூட வசந்தும் தேவாவின் கூட்டாளிகள் நின்றிருந்தனர்.

ஆனால் அவர்கள்யாரும் எதிர்பார்க்காத ஒருத்தர் தனது கூட்டத்தோடு வந்து நின்றார்…

வேறு யாருமில்லை மரியதாஸ்தான் அவரைக் கண்டதும் தேவாவுக்கோ என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ந்து நிற்க, நித்யாவோ எங்கே அவனிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என்று அவனது கையை இறுக்கிப்பிடித்தவள் அவனது தோளோடு ஒட்டி நின்றாள்.

அத்தியாயம்-10

கல்லூரியில் பருவத் தேர்வுக்காண விடுமுறை என அறிவிக்கப்பட்டு விட்டதால் இனி இருவரும் பார்க்க இயலாது என்ற நிலையில் நித்யாவும் தேவாவும் ஒருவரை ஒருவர் கண்களாலே விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டு வரவும்,ரீனா இடையில் இருப்பதால் இரண்டு பேரும் பேச முடியாமல் பார்வையினாலேயே தங்கள் காதலை பரிமாறிக் கொண்டு வந்தனர்…

அதைவிடவும் இந்த தேர்வு முடிந்துவிட்டால் நித்யாவின் திருமணத்திற்கு சிவசு மும்முரமாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார், அதுவேறு இருவரது மனதையும் பிழிந்தது.

அப்போது அந்தப்பக்கம் வந்த வசந்த் இவர்கள் மூவரையும் பார்த்து விட்டு... அடேய்களா இங்க என்ன ஸ்லோ ரேஸா நடந்துட்டு இருக்கு, இவ்வளவு ஸ்லோவா நடக்கறீங்க. பின்னாடி வரக்கூடிய எங்களுக்கு கொஞ்சம் வழி விடுங்க என்றதும்…

ரீனா திரும்பி பார்த்து" உனக்கு அறிவே கிடையாதா? சுத்தி போயேன்"

அட நெத்திலி வாயப்பாரு,என்று அவர்களது சண்டையை தொடங்க.. வசந்த்துதான் தேவாவை பார்த்தான் அவனது கவனமெல்லாம் இங்கு இல்லை, நித்யாவின் கவனமும் எங்க இல்லை என்று தெரிந்து கொண்டவன்.

மெல்ல ரீனாவிடம் கண்ணை காண்பித்து "நெத்திலி வா உன்னை நான் வீட்ல வீட்ல விட்ருதேன்" என்று சொன்னதும்

அண்ணனும் நித்யாவும் வேற உலகத்தில் இருக்கவும்,சரி என தலையாட்டி"அண்ணே நான் வசந்த் கூட போறேன்"என்று தேவாவின் பதிலுக்கு காத்திராமல் வசந்துடன் சென்றுவிட்டாள்.

தனியாக விடப்பட்ட இருவரும் என்ன பேசுவது என்று புரியாமல் அமைதியாக அங்கிருந்த மரத்தின் அருகேயிருந்த திண்டிலு அமர்ந்தனர்.

தேவா இப்பொழுது நித்யாவின் கையை எடுத்து தனது கைக்குள் பொத்தி வைத்தவன்"லட்டு குட்டி" என்று அழைக்கவும், மெல்ல தன் இமைகளை உயர்த்தி கண்களை சுழற்றி அவனைப் பார்க்க எப்பவும் போல அந்த கண்களுக்குள் விழுந்து எழுந்தான் தேவா.

அவளது இதழ்கள் பேசியதைவிட கண்கள் பேசியதுதான் அதிகம்...அக்கம் பக்கம் பார்த்து மெல்ல அவளது அருகில் நெருங்கி வந்தவன் அவளை இழுத்து தன் தோளோடு சாய்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

இருவருக்கும் இப்படியே இருந்துவிடமாட்டோமா என்று ஏக்கம் வரவும்,லட்டு குட்டி நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா? ஏதோ மனசுக்கு நல்லதாகவே படல. கெடுதல் வர மாதிரியே தோணுது அதுதான் கேட்குறேன்.

சட்டென்று அவனது முகத்தை தனது கையில் ஏந்தியவள்"ஏன்" என்று அப்பாவியாக கேட்கவும் அவளது கைகளைப் பிடித்து வைத்துக் கொண்டவன்…

என் முன்னாடி ஒரு நாலு பேரு வந்தானுங்கனா,அடிச்சு அதறிபுதறி பண்ணிட்டு, உன்னை தூக்கிட்டு போயிருவேன். ஆனா உங்க அப்பா கிரிமினல் மண்டை ஏதாவது நரித் தந்திரம் பண்ணி உன்னை என் கிட்ட இருந்து பிரிச்சிருவாரோனு தான் யோசிக்குறேன்.

நீ வேற அவரு சொன்னவுடனே தலையாட்டிருவ,நான் தான்டி பாவம் என பேசவும்.

அப்படியெல்லாம் அப்பா சொன்னா உங்களைவிட்டுலாம் போகமாட்டேன் என்று தலையை ஆட்டி ஆட்டி பதில் சொன்னவளின் கன்னத்தில் பச்சென்று தனது உதட்டை ஒத்தி எடுத்தவன் எதுவும் தெரியாதது போல அமர்ந்து கொண்டான்.

அவளோ அது கொடுத்த வெட்கத்தில் குனிந்து நிலம் பார்த்தவளின் முன் வந்து நின்றவரைப் பார்த்து பதறி எழும்பிவளின் கன்னத்தில் பளீரென்று அறைந்திருந்தார் சிவசு…

இதை எதிர்பார்க்காத தேவா, அவரது கையை பிடித்து இருந்தான், அடுத்த அடி அவளது மேல் விழுவதற்குள்.சிவசுவின் முகமெல்லாம் சிவந்து மகளைப் பார்த்து இதுக்குத்தான் காலேஜ்க்கு வர்றியா.என்றவர் அவளது கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துப் போனார்,பக்கத்தில் நின்றிருந்த மாணவர்கள் எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்க்கவும்…

சார் ப்ளீஸ் அவ கையை விடுங்க எல்லோரும் ஒரு மாதிரியா பாக்குறாங்க சார் என்று அவரிடம் சொல்லவும்…

அவனது நெஞ்சில் கை வைத்து தள்ளி அவ என் பொண்ண நான் கூட்டிட்டு போறேன் அதைக் கேட்க நீ யாருடா? ரௌடி பையன் தானடா நீ ,உன்னைப் பற்றியும் உன் குடும்பத்தை பற்றியும் எல்லாம் விசாரிச்சுட்டேன்…

நித்யா அவரது கைப்பிடியில் இருந்து விலகி ஓடி வந்து தேவாவின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு,அவனது தோளோடு சாய்ந்து கொண்டாள், தேவாவும் அவளை தன்னோடு அணைத்துப் பிடித்துக் கொண்டு நின்றான்.

அதைப் பார்த்ததும் சிவசுவின் மொத்த ரத்த நாளங்களும் வெடிக்காத குறைதான்...தன் கைமுஷ்டியை இறுக்கியவர் இது என்னோடப் பொண்ணு,இவளை இப்போ என்கூட அனுப்பலைனா கண்டிப்பா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன்...உன் மொத்த குடும்பத்து மேலயும் என் பெண்ணை கடத்திக்கொண்டு வச்சிருக்கீங்க அப்படினு என்றதும்…

தேவாவும் நித்யாவும் சிறிது யோசித்து நிற்க,இப்போது தேவா நித்யாவைப் பார்த்து" நீ இப்போ போ, வேற ஏதாவது பிரச்சனைனா நான் பார்த்துக்குறேன் என்றவன்: இந்த தூத்துக்குடியில் இருந்து எங்கள மீறி உன்னை வெளியே கொண்டு போக முடியாது பார்க்கலாம், நான் இருக்கேன், தைரியமா போ என்று அனுப்பி வைத்தான்.

ஆனால் வீடு சென்றதும் சிவசு நித்யிவை ரொம்ப அடித்துவிட்டார்,அவளை மட்டுமல்ல பெண்ணை 

 அடக்க ஒடுக்கமாக வளர்க்க மாட்டியா என்று ஜானகியையும் அடித்தார்.

அவளை தனியறையில் சிறை வைத்துவிட்டார்,தேவா அவளை மறுபடியும் பார்க்க முயற்சி செய்ய,அவனால் முடியவில்லை. இங்கு கல்லூரியில் நடந்த விஷயங்கள் ஏற்கனவே மரியதாஸின் காதிற்குப் போய்விட்டது...சிவசுவின் வீட்டை கண்காணிக்க ஏற்பாடு செய்துவிட்டார்.

பத்து நாள் காத்திருந்தவன் கல்லூரிக்கு ஹால் டிக்கெட் வாங்குவதற்கு நித்யா வருவாள் என்று எதிர்பார்த்தான் அதற்கும் அவள் வரவில்லை என்றதும் சுதாரித்த விட்டான் தேவா…

ஏற்கனவே ரிஜிஸ்டர் ஆபிஸில் அப்ளை செய்து வைத்திருந்தான், இது தான் சரியான சந்தர்ப்பம் இப்போ விட்டா நித்யாவை சிவசு தந்திரம் ஏதாவது செய்து பிரித்துவிடுவார் என யோசித்தவன்,தனது கூட்டாளிகளை அழைத்து அவர்களது உதவியை கேட்டான்.

அடுத்த நாள் காலை சிவசு தனது வேலைக்கு சென்றதும் தனது வண்டியை எடுத்தவன் நேராக போய் நின்றது, சிவசுவின் வீட்டிற்கு முன்பாக தான்…

வெளியே இரண்டுபேர் நின்றுகொள்ள கதவை வேகமாகத் தட்டவும் ஜானகிதான் வந்து திறந்தார்...அவ்வளவுதான் சர்ரென்று உள்ளே நுழைந்து நித்யாவை தேடியவனை பார்த்ததும்,ஜானகிதான் பதறினார்.

யாருடா நீ வீட்டுக்குள்ள அதிரடியாக நுழைந்து என்னத்த தேடுற….போலீசை கூப்பிடுவேன் என்றதும்...நின்று நிதானமாக திரும்பி பார்த்தவன் தனது காப்பை கையின் மேலே ஏற்றிகொண்டு" நித்யாவை எங்க அடைச்சு வச்சிருக்கீங்க, அதை சொல்லுங்க முதல்ல" என்று கேட்டான்.

அதற்குள் தேவாவின் சத்தம் கேட்டு நித்யா உள்பக்கம் இருந்து கதவைத் தட்டவும், அதை கேட்டு ஓடியவன் பார்த்தது வெளிப்புறமாக பூட்டி வைத்திருந்த கதவைத்தான்.

"நீங்க எல்லாம் மனுஷங்களா என்ன? பெத்த பிள்ளை இப்படி தான் பூட்டி வைப்பாங்களா? காட்டுமிராண்டித்தனமாக இருக்கீங்க என்றவன் பக்கத்தில் தேடிப்பார்த்து கம்பி கிடைக்கவும் அதை வைத்துதான் பூட்டை உடைத்து கதவு திறந்ததும்,நித்யா ஓடி வந்து தேவாவை கட்டிக்கொண்டாள்.

அவளது முதுகை தடவி ஒண்ணுமில்லம்மா என்று சமாதானப்படுத்தி அவனைத்தான் ஜானகி பார்த்துக்கொண்டிருந்தார்.

அதற்குள் நித்யாவின் முகத்தை நிமிர்த்தி பார்த்தவனுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.சிவசு அடித்திருக்கிறார் கன்னம் சிவந்து கண்களுக்கு கீழ் கருவளையம் வந்து பார்க்கவே பத்துநாள் பட்டினி கிடந்தவன் போல இருக்கவும்.லட்டு குட்டி வா என் கூட உன்னை அழைச்சிட்டு போறேன்,நிம்மதியாக அவனது கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்…

அவ்வளவே! நித்யாவும் தேவாவும் அந்த வீட்டிலிருந்து வெளியே வரும்போது ஜானகி எந்தவித எதிர்ப்பும் காண்பிக்கவில்லை...நல்லா இருக்கட்டும் என்றுதான் தாய் மனது வாழ்த்தியது.

நித்யாவை அழைத்துக் கொண்டு சென்றவன் தெரிந்தவர்களின் ப்யூட்டி பார்லர் அவளுக்கு எல்லாம் எடுத்துக் கொடுத்து,அவளை மணப்பெண்ணாகவே அழைத்து சென்றான்.

இப்போது அதற்கு பங்கம் வந்ததைப்போல மரியதாஸ் வந்ததும் தேவாவோ ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

எதிரில் நிற்பது எதிரி என்றால் அடித்து வீழ்த்தி விடுவான்,நிற்பது அவனது உயிரான தலைவனும் தகப்பனுமல்லவா…

அதற்குள் "வாங்க தாஸ் அண்ணே என்று அந்த ஆபிசரே அவரை அழைக்க...மகனின் அருகில் வந்தவரிடம்" நம்ம பையனுத் தெரிஞ்சது அதான் தகவல் சொன்னேன்,என்றவரை பார்த்து சிரித்தவர்" ரொம்ப நன்றி" என்றுவிட்டு:அருளு என அழைக்கவும் அவர் அருகில் வந்ததும்"உன் மகன்கிட்ட சொல்லு, தாஸ் மவன் ஒன்னும் அநாதையில்லனு,அந்த தாலியவும் கையில எடுத்திட்டு வா" என்றதும்,உள்ளே வந்த அருளோ தேவாவை பார்த்து கண் சிமிட்டினார்.

இருவருக்கும் திருமணத்தை நல்லபடியாக நடத்தி வைத்தார்... சாட்சி கையெழுத்தை தன் மகனுக்கு தானே போட்டவர் நித்யாவிற்கு சாட்சி கையெழுத்தை அருளை போட சொன்னார்.

திருமணம் முடிந்ததும் தேவா ஓடிச்சென்று தன் தகப்பனின் காலில் விழவும் கூட சேர்ந்து நித்யாவும் விழுந்தாள்…

"நல்லா இருங்க குலம் தழைக்க வாழுங்கள்" என்று ஆசீர்வதித்தவர்.தனது காரில் ஏறி சென்று விட, கூடவே இருந்து அருள்தான் மணமக்களை வீட்டிற்கு அழைத்து வந்தார்

அதற்குள் தேவாவின் திருமணம் செய்தி அவர்கள் ஏரியா எங்கும் பரவி விட... மணமக்களை ஆரவாரத்துடனும் வெடியுடனும் வரவேற்றனர்.

அதற்குள் வீட்டில் நடந்த கலவரம் எல்லாம் சிவசுவிற்கு போனது,அவர் வீட்டிற்கு போனில் அழைக்கவும் ஜானகி விஷயத்தை சொல்லியிருந்தார்.

வீட்டிற்கு வந்து பார்த்த சிவசுவிற்கு கோபம் கோபம் மட்டுமே.பொண்ணு ஓடிப் போயிட்டாளே என்பதைவிட தன்னை மீறிப் போய் நல்லியிருந்துடக்கூடாதே என்றுதான் பழிவெறி இருந்தது...எப்படியாவது இரண்டு பேரையும் பிரிக்கணும் என்று நினைத்தவர்;உடனே அவர்கள் ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து பெண்ணை கடத்திட்டு போய்ட்டாங்க என்று கேஸ் கொடுத்திருந்தார்.

பொண்ணும் மாப்பிள்ளையும் வீட்டுக்கு வந்ததுதான்...ஹப்பா தன் மகனுக்கு கல்யாணம் முடிஞ்சிட்டு அதுவும் அவன் விரும்பிய பெண்ணை கூட்டிட்டு வந்துட்டான் என்றதும் ரெஜினாவிற்கும் அகதாவிற்கும் சந்தோஷத்தில் கைகால் ஓடவில்லை.

அதுவும் நித்யாவை பார்த்ததும் ரொம்ப பிடித்து போய்விட்டது,பின்ன ரீனாவுக்கு சொல்லவே வேண்டாம்…

ஹய்யா நித்யாவே எனக்கு அண்ணியா வந்துட்டா என்று ஒரே குதூகலம் தான்...இருவரையும் தேவாவின் அறையில் இருக்க வைத்திருந்தனர்.

நித்யா வீட்ல இருந்து என்ன மாதிரி பிரச்சனை வருமென்று தெரியாது என்பதால்,

"தனது அறையில் தான் நேசித்த பெண் இப்போது தன் மனைவியாக, தன் அருகில் இருக்கிறாள் என்பதே தேவாவிற்கு ஒரு யானை பலத்தைக் கொடுத்தது.

மெல்ல திரும்பி தன் மனையாளை பார்க்க அவளோ புது பெண்ணாய் அந்த அறையை விழிவிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஓய்...லட்டு என அழைத்து அவளது கன்னத்தை மெல்ல தன் விரல்களால் வருடவும் அவளது கண்கள் அந்த தொடுகைக்கு மறுமொழியாக மெல்ல மூடி அதை ரசித்தது.

அப்படியே அவளை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டவன்,அவளது வயிற்றூனூடே கையை கொடுத்து இறுக்கி தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கி அவளது காதில் ரகசியம் பேச.அதைக்கேட்டு அவளது முகம் வெட்கத்தில் சிவந்தது...அதை விடவும் அவனது மீசை அவளது காதோடு பல ரகசியத்தை சொல்லியது.

மெல்ல அவளது கன்னங்களில் தன் உதடு கொண்டு அதன் வளுவளுப்பை சோதிக்கத் தொடங்கியவனுக்கு,அவனது இளமைக்கு பெரும் சோதனையாக அமையவும்.

கதவு படபடவென தட்டபட்டது யாரென்று பார்க்க கதவைத் திறக்கவும் ரீனா தான் மூச்சு வாங்க நின்றிருந்தாள்" அண்ணே உடனே நித்யாவை கூட்டிட்டு துறைமுகம் போவியாம்,உனக்காக அங்க பெரிய போட்டு ரெடியா இருக்குதாம்.அப்புறம் உன் செல்போன்ல இருந்து சிம் கார்ட தூக்கிப்போடுவியாம்...நாளைக்கு அப்பா உனக்கு வேற போன் சிம்கார்டு எல்லாம் கொடுத்து விடுவாங்களாம்.

உனக்கு கீழ கார் காத்திருக்கு சீக்கிரம்" என்றதும் 

"என்ன ரீனாகுட்டி இவ்வளவு பதட்ட படுறளவுக்கு என்னாச்சுது,அப்பா சித்தப்பா எங்க" என்று கேட்டுக்கொண்டே கீழிறங்கினான்.

"அது... என்று நித்யாவை பார்த்தவள் "இவங்க அப்பா நீ அவங்கப் பொண்ண கடத்திட்டனு கேஸ் கொடுத்திருக்கிறார்"

ச்ச்...அதுதான் கேஸ் நிக்காதே.ஏன் இவ்வளவு பதட்டப்படணும் என்று கேட்டவனை முறைத்துப் பார்த்தவள்."நம்ம பழைய இன்ஸ்பெக்டரும்,எஸ்பியும் மாறிட்டாங்க,நீ கையிலக் கிடைச்சா கண்டிப்பா அடிப்பாங்க,அதுல அவங்கப்பா வேற யாரோ கட்சியாளு மூலமா சென்னையிலயிருந்து ப்ரஷர் கொடுத்திருக்காங்க.அதான் நீங்க அவங்க கையில கிடைக்காம இருக்கத்தான் இந்த ஏற்பாடு என்றாள்.

அதற்குள் ரீனாவின் மொபைல் அலறவும்...அப்பாதான் நீ சீக்கிரம் போ என்று விரட்டினாள் அவர்களை.

உடனே தேவா நித்யாவை தன் கையில் பிடித்துக் கொண்டு எல்லாரிடமும் சிறுதலைசைப்புடன் காரில் ஏறினவன்,துறைமுகம் சென்று தங்களது பெரிய போட்டில் ஏறிக்கொண்டான்.

போட் கிளம்பும்வரை மரியதாஸும் அருளும் கரையில் நின்று பார்த்திருந்தனர்...அடுத்து என்ன காத்திருக்கோ என்று பெருமூச்சு விட்டவர்,அப்படியே போலீஸ் ஸ்டேஷன் நோக்கி சென்றனர்.

அங்கு போட்டிலிருந்தவர்களோ கரையில் என்ன நடக்குமோ என்று பதைத்திருந்தனர்.